• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்' என்னும் பெயரை இலங்கை புலமைச் சொத்துக்கள் திணைக்களம் என திருத்துத
- 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகமானது இலங்கையின் புலமைச் சொத்து முறைமையை நிர்வகிப்பதற்கான பணிப்பாணையைப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, அதன் பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சருவதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் போது எழும் பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம் என்னும் பெயரை இலங்கை புலமைச் சொத்துக்கள் திணைக்களம் என திருத்தும் பொருட்டும் 'இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்' ஆக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் 04(1) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிமுகவுரையை 'இலங்கை புலமைச் சொத்துக்கள் திணைக்களம்' ஆக திருத்தும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.