• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Srilankan Airlines Ltd., SriLankan Catering Ltd. மற்றும் Mihin Lanka (Pvt) Ltd. என்பன தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளை புலனாய்வு செய்து ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை
- 2006‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2018‑01‑31 ஆம் திகதிவரை Srilankan Airlines Ltd., SriLankan Catering Ltd. மற்றும் Mihin Lanka (Pvt) Ltd. என்பன தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளை புலனாய்வு செய்து ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழு பல்வேறுபட்ட தரப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்ற எழுத்துமூல மற்றும் வாய்மூல முறைப்பாடுகள் மற்றும் ஏனைய தகவல்களை பரிசீலனை செய்து 32 சிபாரிசுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு சட்டமா அதிபருக்கு சமர்ப்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.