• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திற்கான திருத்தங்கள்
- முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டமும் அதனுடன் தொடர்புபட்ட திருத்தங்களும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் விவாக மற்றும் விவாகரத்து பதிவு செய்தல் தொடர்பாக ஏற்பாடு செய்கின்றன. கூறப்பட்ட சில சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தப்பட வேண்டுமென்று முஸ்லிம் சமூகத்திலும் அதேபோன்று மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடையிலும் சில கரிசனைகள் நிலவுகின்றன. அதற்கிணங்க, விவாக வயது, பதிவு செய்தல் நடைமுறைகள் மற்றும் விவாகம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஏற்பாடுகளில் திருத்தங்களை உள்ளடக்கி கூறப்பட்ட சட்டத்தை திருத்துவதற்கான சட்டத்தை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரினாலும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.