• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேர்மத்தைப் பலப்படுத்து வதற்காக 2,000 பேருந்துகளைப் பெற்றுக் கொள்ளல்
- பொது மக்களுக்கு சௌகரியமானதும் தரமானதுமான சேவையொன்றை வழங்கும் நோக்குடன், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேர்மத்திற்கு 2,000 பேருந்துகளை சேர்த்துக் கொள்வதற்கு உள்நாட்டு / வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்களையும் பிரேரிப்புகளையும் கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.