• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் வெடி பொருட்களை இனங்காணும் ஆற்றல் கொண்ட பொதிகளை திரையிடல் பரிசோதனை செய்யும் X-Ray இயந்திரமொன்றை வழங்கி, தாபித்து, கையளித்தல்
- வௌியக நிதியிடலுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் 09 வெடி பொருட்களை இனங்காணும் முறைமைகளை வழங்கி, தாபித்து மற்றும் செயற்படுத்துவ தற்காக வெடி பொருட்களை இனங்காணும் முறைமைகளை வழங்குவதற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ள வழங்குநர்களிடமிருந்து , பெறுகை வழிகாட்டலை பின்பற்றி விலைமனுக்களை கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.