• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் 41 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2016 ஒக்ரோபர் 27 ஆம் திகதிய 1990/23 ஆம் இலக்க வர்த்தமானியில் (அதிவிசேட) பிரசுரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டுத்துறை சங்கங்களின் ஒழுங்குவிதிகளையும் 2017 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2006/13 ஆம் இலக்க ஒழுங்குவிதிகளையும் (திருத்தப்பட்ட) மேலும் திருத்துவதன் மூலம் 2019 யூன் 18 ஆம் திகதிய 2128/8 ஆம் இலக்க வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஆதலால், தற்போதைய போக்குகளின் கீழ் ஒழுங்கானதும் நியாயமானதுமான வழியில் விளையாட்டுத்துறை சங்கங்களின் தேர்தல்களை நடாத்துவதன் ஊடாக தேசிய விளையாட்டுத்துறை சங்கங்களின் நிர்வாகத்தை ஒழுங்குறுத்தும் நோக்குடன் வௌியிடப்பட்ட 2019 யூன் 18 ஆம் திகதிய 1228/8 ஆம் இலக்க வர்த்தமானியை (அதிவிசேட) பாராளுமன்றத்தில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.