• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போகம்பரை மைதானத்தில் புதிய செயற்கை ஓடுபாதையை இடுதல்
- சுகததாச தேசிய விளையாட்டு கட்டடத் தொகுதி அதிகாரசபையினால் நிர்வகிக்கப்படும் போகம்பரை மைதானமானது தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பிரதான பிரிவுசார் விளையாட்டு பயிற்சி நிலைய மொன்றாகும். தற்போது, இலங்கையில் செயற்கை ஓடுபாதைகளுடன் கூடிய 2 மைதானங்கள் உள்ளதுடன் அவை கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. குறைவான சனத்தொகையுடனும் ஓரளவிற்கு உயர்ந்த இடத்திலும் அமைந்துள்ளதும் சகல மாகாணங்களினதும் விளையாட்டு ஆளணியினர் இலகுவாக அணுகக்கூடியதுமான போகம்பரை மைதானத்தில் செயற்கை ஓடுபாதையொன்றை கட்டியெழுப்பலானது காலத்தின் தேவையொன்றான படியால், அதனை புதிய கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.