• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணித்தல்
- இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு நிர்மாணிக்க எதிர்பார்க்கும் 10,000 வீடுகளினதும் நீர்வழங்கல், உள்ளக அணுகுவீதிகள், தேசிய மின் வலையிணைப்பிலிருந்தான மின்சார வழங்கல் என்பவற்றை வழங்கும் பொருட்டும் மண்தடுப்பு சுவர்களையும் வௌ்ளநீர் வடிகாலமைப்பையும் நிர்மாணிக்கும் பொருட்டும் இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியங்களின் கீழ் வீடொன்றிற்கு 150,000/- ரூபாவை முதலிடுவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய அத்தகைய 5,000 வீடுகளின் மொத்தச் செலவின் 1.5% ஆன 86.25 மில்லியன் ரூபா தொகையினைக் கொண்ட அமுலாக்க கட்டணமொன்றை பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்புக்கு செலுத்துவதற்கும் அத்துடன் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வருடாந்த வரவுசெலவுத்திட்ட ஏற்பாடுகளிலிருந்தான நிதியத்தைப் பயன்படுத்துவதற்கும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.