• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரிய சகல துறைகளையும் தழுவும் கமத்தொழில் கொள்கை
- தற்போது அமுலிலுள்ள விவசாயத்துறைக் கொள்கையானது பயிர் விவசாயத் துறையின் அபிவிருத்தி மீது பெருமளவு கவனத்தை குவித்து 2007 ஆம் ஆண்டில் விருத்தி செய்யப்பட்டுள்ளது. ஆதலால், வளர்ந்துவரும் சந்தை வழிமுறைகளுடன் பொருந்தச் செய்யும் பொருட்டு புதிய உரிய சகல துறைகளையும் தழுவும் கமத்தொழில் கொள்கையொன்றை அறிமுகப்படுத்து வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க, பொதுமக்களின் கருத்துக்களுக்காக திறந்திருக்கும் ஆலோசனை செய்முறை ஒன்றுக்கூடாக கூறப்பட்ட கொள்கை வரைபினை மேம்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினாலும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு குறிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.