• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித்துண்டுகளை குறித்தொதுக்குதல்
- கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் பிராந்திய கைத்தொழிற் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது பிராந்திய மட்டத்தில் கைத்தொழில் மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். இதற்கிணங்க இந்த கைத்தொழிற் பேட்டைகளில் முதலீடு செய்வதற்கு இந்த அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 18 முதலீட்டாளர்களுக்கு 35 வருடகால குத்தகை அடிப்படையில் உரிய கைத்தொழிற் பேட்டைகளிலிருந்து காணித்துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.