• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையில் ஈடுபட்டுள்ள 10,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்முயற்சி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
- தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறையானது இளைய தலைமுறையினருக்கிடையே மிகவும் பிரபல்யம்வாய்ந்ததும் கவரப்பட்டதுமான துறையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த துறை தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விசேட பயிற்சியினை வழங்கி பயன்பெறும் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் நாடுமுழுவதும் தழுவும் விதத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமாக அக்கறையுள்ள 10,000 இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சியினை வழங்குவதற்கும் அவர்களிடமிருந்து தொழில்முயற்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலான பிரேரிப்பொன்றை பெற்றுக் கொண்டு அதனை மதிப்பிட்டதன் பின்னர் சாதகமான 3,000 விண்ணப்பதாரர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு டெப் கணனி, இணையத்தள வசதி, தேவையான ஏனைய கருவிகள், நிதி வசதிகள் வழங்குவதற்குமான கருத்திட்டமொன்றை தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.