• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய கொள்கையைத் தயாரித்தல்
- உள்நாட்டு கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் அதன் நிலையான தன்மை என்பவற்றின்பால் தற்போது நடைமுறையிலுள்ள பல்வேறுபட்ட கொள்கைகளுக்கிடையில் நிலவும் ஒவ்வாமை, தேவையான தொழிநுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாமை, நிபுணத்துவம் பெற்ற மனிதவளம் குறைவாக உள்ளமை, வலுசக்திக்கான கூடிய செலவு, கைத்தொழில் சார்ந்த சுற்றாடல் சவால்கள் மற்றும் சட்டங்களில் நிலவும் குறைப்பாடுகள் என்பன பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை குறைத்து நாட்டின் அபிவிருத்தியின்பால் பங்களிப்பு நல்கக்கூடிய வெற்றிகரமான கைத்தொழில் திறமுறையொன்றை தயாரிப்பது தேசிய தேவையாக மாறியுள்ளது. இதற்கிணங்க, கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய கொள்கை யைத் தயாரிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.