• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி நோக்கங்களுக்காக காணி யொன்றை கொள்வனவு செய்தல்
- களனி பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கணனி மற்றும் தொழிநுட்ப பீடம் தற்போது நடாத்திச் செல்லப்படும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டடம் மற்றும் மனையிடத்தின் இடவசதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், நலனோம்பல் பணிகள் அதேபோன்று பணியாட் தொகுதியினருக்குத் தேவையான வசதிகள் என்பவற்றுக்கு போதாமையினால், இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் பல்கலைக்கழகத்திற்கு சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள ஏக்கர் 2 றூட் 2 பேச்சர்ஸ் 11.60 விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை 539 மில்லியன் ரூபாவைக் கொண்ட அரசாங்க மதிப்பீட்டு விலைக்கு பல்கலைக்கழகத்தினால் ஈட்டப்பட்ட தொகையிலிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.