• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக அச்சகங்களுக்கு கையளித்தல்
- அச்சகங்களிலிருந்து 2020 ஆம் ஆண்டு சார்பில் பாடப் புத்தகங்களை அச்சிட்டுக் கொள்வதற்காக திறந்த கொள்வனவு நடவடிக்கை முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கேள்விதாரர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆகக்குறைந்த கேள்வி விலையும் இணக்கப்பேச்சுக்களின் பின்னர் கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் உடன்பட்ட ஆகக்குறைந்த கேள்வி விலையைும் கேள்விதாரர்களின் அச்சிடல் ஆற்றல் மற்றும் உரிய காலத்தில் விநியோகித்தல் என்னும் விடயங்களையும் அமைச்சரவை கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட 29 அச்சகங்களுக்கு கையளித்து பாடப்புத்தகங்களை அச்சிட்டுக் கொள்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், 2020 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள பாடப்புத்தகங்களை அமைச்சரவை கொள்வனவுக் குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட கொள்வனவு கால அட்டவணைக்கு அமைவாக 2019 நவெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்கு இயலுமாகும் வகையில் மேற்குறிப்பிட்ட 29 அச்சகங்களுக்கு கையளித்து 386 வகை பாடப்புத்தகங்களின் 33,712,100 பிரதிகளை 3,982,299,535.00 ரூபா செலவில் அச்சிட்டுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.