• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் கிளை அலுவலகங்களுக்காக புதிய கட்டடங்களை நிர்மாணித்தல்
- போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றாக செயற்படும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பணிகளாவன 2009 ஆம் ஆண்டிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட இலகு வாகன அனுபத்திப்பத்திரங்களை புதுப்பித்தலானது 2017 மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது. ஆதலால், வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான சேவையினை வழங்குவதற்கு நாடு முழுவதும் 25 கிளை அலுவலகங்கள் தாபிக்கப்பட்டுள்ளதோடு, கம்பஹ , வேரஹெர, குருநாகல், கண்டி மற்றும் அநுராதபுரம் கிளை அலுவலகத்திற்கு சேவை நாடுநர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். இதற்கமைவாக, முறையான கொள்வனவு வழிமுறையினை பின்பற்றி தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நிதியினைப் பயன்படுத்தி வேரஹெர, குருநாகல், மற்றும் அநுராதபுரம் கிளை அலுவலகங்கள் சார்பில் முன்வார்ப்பு கட்டடங்களும் கம்பஹ மற்றும் கண்டி கிளை அலுவலகங்கள் சார்பில் நிரந்தர கட்டடங்களும் நிர்மாணிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.