• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விலங்கு உணவுக்குத் தேவையான மேலதிக சோளத்தை இறக்குமதி செய்தல்
- 2019 ஆம் ஆண்டில் உள்நாட்டு சோள உற்பத்தி போதாமையினால் விலங்கு உணவு உற்பத்தியின் பொருட்டு 80,000 மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யும் தேவை நிலவுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, முதலாவதாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் சிபாரிசின் மீது தேசிய உணவு மேம்பாட்டுச் சபையினால் 50,000 மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்து விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் கோரிக்கையின் மீது பகிர்ந்தளிப்பதற்கும் இரண்டாவதாக தேவைப்படும் மீதி சோள அளவினை கம்பனிகள் ஒவ்வொன்றினாலும் உற்பத்தி செய்யப்படும் விலங்கு உணவின் அளவு மற்றும் வளர்க்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கை என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விலங்கு உணவு உற்பத்தியாளர்களுக்கும் கோழி வர்த்தகர்களுக்கும் 2020 சனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கும் இதன் பொருட்டு சோளம் கிலோ ஒன்றுக்கு 10/- ரூபாவைக் கொண்ட விசேட வர்த்தகப் பண்டங்கள் வரியினை விதிப்பதற்கும் கமத்தொழில் திணைக்களத்தினால் சோளம் செய்கை பண்ணுவதனை ஊக்குவிக்கும் வழிமுறையொன்றை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கும் பொருட்டும் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.