• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரதான உணவுகளை இரும்பு மற்றும் போலிக் அமிலம் ஊடாக செறிவூட்டுவதன் மூலம் குருதிச் சோகை மற்றும் அதுசார்ந்த சுகாதார பிரச்சினைகளைத் தணித்தல்
- அமைச்சரவையினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்திற்கு அமைவாக அரிசி மற்றும் கோதுமை மா என்பவற்றில் இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்த்து செறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரிசி மற்றும் கோதுமை மா உள்ளடக்கப்பட்ட பிரதான உணவுகளை இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்த்து செறிவூட்டுதல், பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தில் இதன் செயற்பாட்டை மதிப்பிடுதல் மற்றும் இவ்வாறு செறிவூட்டப்பட்ட அரிசியினை நாட்டில் உற்பத்தி செய்தல் அடங்கலாக இந்தக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.