• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைப்பதற்கான சட்டம்
- இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினால் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் மீது சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள உத்தேச சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்ப தற்காகவும் மும்மொழிகளிலும் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காகவும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.