• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் என்பவற்றினால் வௌிநாட்டு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படவுள்ள நன்கொடை உடன்படிக்கைகள்
- பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் தாய்லாந்தின் தொழினுட்பம் பற்றிய ஆசிய நிறுவனத்திற்கும் இடையில் தரவி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடநெறிகள் என்பவற்றின் அபிவிருத்தி சம்பந்தமான நன்கொடை உடன்படிக்கைகள் இரண்டினையும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஒஸ்ரியாவின் கிராஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் தெற்காசியாவுக்கான தக்கநேரத்தில் கற்பித்தல் திறன்கள் சம்பந்தமான நன்கொடை உடன்படிக்கை ஒன்றினையும் களனி பல்கலைக்கழகத்திற்கும் இன்பீரியல் கல்லூரியின் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சி அலுவலகத்திற்கும் இடையில் பொருள் பரிமாற்றம் சம்பந்தமாக நன்கொடை உடன்படிக்கையொன்றினையும் செய்து கொள்வதற்காக குறித்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.