• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதிச் சட்டமூலம் - 2019
- 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வருமான பிரேரிப்புகளில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மோட்டார் வாகனங்களின் மீது சொகுசு வரி அறவிடுவதற்கு உரியதாக வேன், தனி கெப் வண்டி, இரட்டை கெப் வண்டி, மோட்டார் சைக்கிள், மோட்டார் டிரைசிகள், முச்சக்கர வண்டி போன்ற பயணிகள் போக்குவரத்து வாகனங்களும் லொறி, உழவு இயந்திரம், சிறிய உழவு இயந்திரம், இழுவை பெட்டிகள் போன்ற பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் பிணியாளர் வண்டி மற்றும் மரணச் சடங்குகளுக்கான வண்டி போன்ற வாகனங்கள் தவிர பிற சகல வாகனங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 'திட்டவட்டமாக குறிப்பிடப்பட்ட மோட்டார் வாகனங்கள்' என்னும் பொருள்கோடலைத் திருத்துவதற்கும் கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் என்பன பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு வௌியே செய்யப்படும் கொடுப்பனவுகள் மீது 3.5 சதவீதம் கொண்ட வௌிநாட்டு வர்த்தக கொடுக்கல்வாங்கல் மீது பற்று வரியொன்றை விதிப்பதற்குமாக 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தை திருத்துவதற்கான நிதி சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.