• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போதுள்ள கண்டல் நிலங்களை பாதுகாத்தலும் இறால் வளர்ப்பு மற்றும் உப்பளங்கள் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான கண்டல் நிலங்களை மீள் நிலைப் படுத்துதலும்
- - அரசாங்கத்திற்குச் சொந்தமானதும் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழும் நிருவகிக்கப்பட்டு வரும் கண்டல் நிலங்களை வேறு அபிவிருத்தி நோக்கங்களுக்காக விடுவிக்காமல் இருப்பதற்கும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்காக தற்போது இனங்காணப்பட்டுள்ள காணிகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் போது உரிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் முறையான ஆய்வினை மேற்கொண்டு அதற்கிணங்க, குறித்த காணிகளை விடுவிப்பது சம்பந்தமான தீர்மானத்தினை எடுப்பதற்கும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் உப்பளங்கள் போன்ற நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் குத்தகை உடன்படிக்கைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணிகளிலிருந்து உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள காணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த குத்தகை உடன்படிக்கைகளை தொடர்ந்தும் நீடிக்காது குறித்த காணிகளை கண்டல் வனச் செய்கைகளுக்காக வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கும் காணி ஆணையாளர் நாயகத்திற்கும் கட்டளையிடுவதற்கும் தற்போதுள்ள கண்டல் நிலங்களின் அளவினை 10,000 ஹெக்டயார்களால் அதிகரிப்பதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய திணைக்களங்களுக்கு அறிவிப்பதற்கும் முன்மொழிந்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.